பட்ஜெட் 2025-26: தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?

பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2025-26: தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றம் இருக்குமா?
Published on

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்கிறார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள இந்த பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தற்போது ஊதியதாரர்களுக்கு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாய் நிலையான வரி கழிவாக வழங்கப்படுகிறது. இது 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கலாம். அதேபோல இந்தியாவில் வேலைக்கு சென்று வீட்டுக் கடன் வாங்கி இருக்கும் ஊதியதாரர்களுக்கு குறிப்பிட்ட சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வீட்டு கடனுக்கான அசல் மற்றும் வட்டி தொகையில் கூடுதல் வரி கழிவுகள் வழங்கப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல சேமிப்பு திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வழங்கப்படும் வரி விலக்கை 10,000 ரூபாயிலிருந்து 19,450 என உயர்த்த வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை எஸ்பிஐ உள்ளிட்டவை வைத்துள்ளன. பட்ஜெட்டில் பெருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com