

புதுடெல்லி,
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் இனி மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் அபராத தொகை பிடித்தம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கனரா வங்கியின் அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் சராசரி மாதாந்திர இருப்பு தொகையை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேமிப்பு கணக்குகள், ஊதிய கணக்குகள் மற்றும் NRI சேமிப்பு கணக்குகள் என அனைத்து வகையான கணக்குகளும் இதில் அடங்கும் .
இதற்கு முன்பு, நகர மற்றும் மெட்ரோவில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.2,000, சிறிய நகரங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000 மற்றும் கிராமபகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் ரூ.500 என்ற குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டியிருந்தது. இந்தத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் ரூ.25 முதல் ரூ.45 வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அபராதம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.