சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு

பிரண்ட் கச்சா எண்ணெய் 0.75 சதவீதம் அதிகரித்து 115.74 டாலராக அதிகரித்து உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்வு
Published on: 

சவுதி அரேபியாவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சவுதியின் மிகப்பெரிய தனுரா, ரபிக் மற்றும் ராம்கோ சுத்திகரிப்பு நிலையங்கள் நேற்று முன்தினம் தாக்குதலுக்கு ஆளாகின. மறுபுறம் ஹார்முஸ் நீரிணையில் ஈரானும் தனது பிடியை இறுக்கி இருக்கிறது.

நீரிணையின் அங்கீகரிக்கப்படாத வழியில் செல்ல முயன்ற 3 எண்ணெய் கப்பல்கள் கண்ணிவெடியில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்து உள்ளது. இவ்வாறு கச்சா எண்ணெய் வினியோகம் தொடர்பான கவ லைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உள்ளது. அந்தவகையில் பிரண்ட் கச்சா எண்ணெய் 0.75 சதவீதம் அதிகரித்து 115.74 டால ராக அதிகரித்து உள்ளது.

டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய் விலையும் 0.71 சதவீ தம் உயர்ந்து 102.72 டாலராக உயர்ந்து உள்ளது. இந்த மாதம் மட்டும் சுமார் 15 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

X