கடந்த 10 மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.22.8 லட்சம் கோடி

நேரடி வரி வசூல் விவரம் குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.22.8 லட்சம் கோடி
Published on

புதுடெல்லி,

வருமானவரி, கார்ப்ரேட் வரி, சொத்து வரி, பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி உள்ளிட்டவை நேரடி வரிகளாக உள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த பிப்ரவரி 10-ந்தேதி வரையிலான நேரடி வரி வசூல் விவரம் குறித்து மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதில் நாட்டில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.22.8 லட்சம் கோடி என மத் திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய நிதியாண்டில் இதேக்காலத்தில் பதிவானதை காட்டிலும் 4.1 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி ஜனவரி 11-ந்தேதி வரையிலான கணக் கீட்டின்படி நாட்டின் நிகர நேரடி வரி வசூல் ரூ.19.43 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முந்தைய வசூலை காட்டிலும் 9.4 சதவீதம் அதிகமாகும். இதில் தனிநபர் வருமான வரிவசூல் ரூ.8.90 லட்சம் கோடி (14.51 சதவீதம் அதிகம்), நிறுவன வரி ரூ.10.03 லட்சம் கோடி (5.91 சதவீ தம் அதிகம்), பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி ரூ.50 ஆயிரத்து 279 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com