நேரடி வரி வசூல் ரூ.13.38 லட்சம் கோடியை எட்டியது

பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் கிடைத்த வரி வருவாய் அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.
நேரடி வரி வசூல் ரூ.13.38 லட்சம் கோடியை எட்டியது
Published on: 

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் கடந்த 14-ந்தேதி வரையிலான காலக்கட்டத்தில், இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 13.21 சதவீதம் அதிகரித்து ரூ.13.38 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பெரு நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் பங்குச்சந்தை வர்த்தகம் அதிகரித்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிகர வரி வசூல் 20.58 சதவீதம் அதிகரித்து ரூ.5.99 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லாதோர் செலுத்திய வரி 5.83 சதவீதம் உயர்ந்து ரூ.6.92 லட்சம் கோடியாக உள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் கிடைத்த வரி வருவாய் 52 சதவீதம் என்ற அசுர வளர்ச்சியைப் பெற்று ரூ.46 ஆயிரத்து 840 கோடியைத் தொட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com