தீபாவளி சிறப்பு வர்த்தகம்: தொடக்கத்தில் ஏற்றம் கண்டு, முடிவில் சரிவை சந்தித்த பங்கு சந்தைகள்

இதில், சென்செக்ஸ் 250 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் உயர்ந்து லாபத்துடன் தொடங்கின.
ai image
ai image
Published on: 

மும்பை

பங்கு சந்தைகள், தீபாவளி சிறப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் ஏற்றம் கண்டு, முடிவில் சரிவை சந்தித்தன.

இந்திய பங்கு சந்தைகள் தீபாவளி தினத்தில் குறிப்பிட்ட நேரம் நடத்தப்படும். இதனால், தீபாவளி முகுரத் வர்த்தகம் என்ற சிறப்பு பெயரில் அது அழைக்கப்படும். இதன்படி, நேற்று பிற்பகல் 2.20 மணி முதல் 3.30 மணி வரை 70 நிமிடங்கள் சிறப்பு வர்த்தகம் நடந்தது.

இந்த தீபாவளி சிறப்பு வர்த்தகத்தின் தொடக்கத்தில் பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டு, முடிவில் சரிவை சந்தித்தன. இதில், சென்செக்ஸ் 250 புள்ளிகளும், நிப்டி 40 புள்ளிகளும் உயர்ந்து லாபத்துடன் தொடங்கின. எனினும், அவை முடியும்போது, சற்று சரிவை சந்தித்தன.

பங்கு சந்தையில் சரிவு

இதன்படி, மும்பை பங்குச்சந்தை 28 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. நிப்டி குறியீடும் 43 புள்ளிகள் சரிவை சந்தித்தது. இதனால், 2018-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக இருந்து வந்த, தீபாவளி பண்டிகை அன்று பங்கு சந்தையில் சரிவு இல்லை என்ற வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது. தீபாவளியையொட்டி நடந்த சிறப்பு வர்த்தகத்தில் கடந்த 7 நாட்களாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இதில், மகிந்திரா குழுமம் (0.92 சதவீதம்), இன்டர்குலோப் விமான நிறுவனம், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பெரிய சரிவை சந்தித்தன. இந்த நிறுவனங்கள் உள்பட 30 பிரபல நிறுவனங்கள் பங்கு சந்தையில் சரிவை சந்தித்தன.

இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. எனினும், சன் பார்மா (2.96 சதவீதம்), டாடா ஸ்டீல் (1.88 சதவீதம்), மாருதி மற்றும் பவர் கிரிட் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஏற்றம் கண்டிருந்தன.

X