வங்கிகளுக்கு இந்த மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?

அக்டோபர் மாதத்தில் மட்டும், 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகின்றன.
வங்கிகளுக்கு இந்த மாதத்தில் மட்டும் எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா?
Published on: 

சென்னை,

இந்தியாவில் வங்கிகளுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளும் வழக்கமாக விடுமுறை விடப்படுகிறது. இது தவிர பண்டிகை நாட்களுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் மட்டும், 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் வருகின்றன. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

4 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமின்றி, அக்டோபர் 10 மற்றும் 24-ந் தேதிகளில் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளிலும் நாடு முழுவதும் வங்கிகள் இயங்காது. இதுபோக காந்தி ஜெயந்தி, விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை போன்ற பல பண்டிகைகளும் விடுமுறை நாட்களாகும்.

அக்டோபர் 2 (மகாத்மா காந்தி ஜெயந்தி): தேசிய விடுமுறை. நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 10 (மகாளய அமாவாசை): பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 17 (மகா சப்தமி): அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 19 (தசரா, மகா நவமி, ஆயுத பூஜை, துர்கா பூஜை): அகர்தலா, ஐஸ்வால், புவனேஸ்வர், சென்னை, குவாஹாத்தி, இம்பால், இடாநகர், கோஹிமா, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் ஷில்லாங்கில் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 20 (தசரா, விஜயதசமி, மகாநவமி): கங்க்டாக் மற்றும் இம்பால் தவிர, பெரும்பாலான முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 21 (விஜயதசமி, துர்கா பூஜை): அகர்தலா, பெங்களூரு, கங்க்டாக், குவாஹாத்தி, கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 22 மற்றும் 23 (துர்கா பூஜை): கங்க்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 26 (லட்சுமி பூஜை, அரியணை ஏறிய நாள், மகரிஷி வால்மீகி பிறந்த தினம்): அகர்தலா, சண்டிகார், ஜம்மு, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் உள்ள கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 29 (கர்வா சவுத்): சண்டிகாரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 31 (சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள்): அகமதாபாத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

வங்கி விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கு நேரடியாக செய்ய வேண்டிய பரிவர்த்தனைகள் மட்டுமே பாதிக்கப்படும். காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை செய்ய முடியாது. ஆனால் டிஜிட்டல் சேவைகள் பெறுவதில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

X

Daily Thanthi
www.dailythanthi.com