

உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவராக உள்ளார். முகேஷ் அம்பானி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 11வது இடத்தில் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10.25 லட்சம் கோடியாக இருக்கிறது.
இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ரிலையன்ஸ் நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பு அண்மையில் வழங்கப்பட்டது. இந்தநிலையில் இந்த பதவிக்காக ஆனந்த் அம்பானிக்கு ஆண்டுக்கு ரூ.20 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோக, வருமானத்திற்கு ஏற்ப கமிஷன் தொகையும் ஆனந்த் அம்பானிக்கு வழங்கப்படுமாம்.