

நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து மத்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந்தேதி வரையிலான கணக்கீட்டின் படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு ரூ.77 ஆயிரத்து 762 கோடி அதிகரித்து ரூ.65 லட்சத்து 78 ஆயிரத்து 525 கோடியாக உயர்ந்தது.
வெளி நாட்டு நாணய சொத்துக்கள் ரூ.31 ஆயிரத்து 445 கோடி உயர்ந்து ரூ.51 லட்சத்து 99 ஆயிரத்து 444 கோடியாக உயர்ந்தது. தங்கம் கையிருப்பு ரூ.45 ஆயிரம் கோடி உயர்ந்து ரூ.11 லட்சத்து 64 ஆயிரத்து 484 கோடியாக உள்ளது. சிறப்பு வரைவு செலுத்தல்கள் ரூ.912 கோடி உயர்ந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்து 539 கோடியானது. சர்வதேச நாணய நிதியத்தில் கையிருப்பு ரூ.330 கோடி உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 958 கோடியாக உள்ளது.