தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.65,480 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,195-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.65,560-க்கும் விற்பனையாகி வருகிறது.

அதே சமயம், வெள்ளியின் விலை 4 நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com