தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது.

இந்த சூழலில் நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.71,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com