தங்கத்தின் இறக்குமதி 11 சதவீதம் குறைந்தது - உலக தங்கம் கவுன்சில் தகவல்

விலையுயர்வு, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 600 டன்னாக சரியும் என தகவல் வெளியாகியுள்ளது.
தங்கத்தின் இறக்குமதி 11 சதவீதம் குறைந்தது - உலக தங்கம் கவுன்சில் தகவல்
Published on

தங்கம் விலை கடந்த ஆண்டு தொடங்கி நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நடப்பு ஆண்டு (2026) இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் ரூ.2 லட்சத்தை கடந்து சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த விலை உயர்வால் சாமானியர்களால் தங்கத்தை வாங்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக தங்கம் கவுன்சில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விலை உயர்வுக்கு எதிராக நாட்டின் தங்கத்தின் தேவை வெகுவாக குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2025) நாட்டின் தங்கம் இறக்குமதி 11 சதவீதமாக சரிந்து 710.9 டன்னாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டில் (2024) தங்கம் இறக்குமதி 802.8 டன்னாக இருந்தது. மதிப்பு அடிப்படையில் ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 930 கோடியில் இருந்து ரூ.7 லட்சத்து 51 ஆயிரத்து 490 கோடியாக உயர்ந்தது. விலையுயர்வு, புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 600 டன்னாக சரியும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com