ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆடி கார்கள் விலை அதிரடியாக சரிவு

ஜிஎஸ்டி அமலுக்கு வர உள்ள நிலையில், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போதே கார்களின் விலையை குறைத்துள்ளன.
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: ஆடி கார்கள் விலை அதிரடியாக சரிவு
Published on

ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களில் ஏராளமான பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கார்களும் அடங்கும். வரிகுறைப்பு 22-ந் தேதி அமலுக்கு வருகிறது. இதற்கிடையே, வரிகுறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, ஜெர்மனி சொகுசு காரான ஆடி கார்கள் விலை குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம்வரை விலை குறைக்கப்படுவதாக கூறியுள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால், விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கிறது.

ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தம் காரணமாக சிறிய கார்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. பெரிய கார்களின் விலையும் 40 சதவீத வரம்பில் வருகிறது. இதனால் கார்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜிஎஸ்டி அமலுக்கு வர இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போதே கார்களின் விலையை குறைத்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com