2½ லட்சம் கார்களை திரும்ப பெற்ற ஹோண்டா- காரணம் என்ன?

அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனம் தயாரித்த 2,59,033 கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
AI Image for representation
AI Image for representation
Published on

கார் விற்பனை சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக ஹோண்டா நிறுவனம் உள்ளது. ஜப்பானை சேர்ந்த இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் உள்ளிட்ட நகரங்களில் ஹோண்டா தயாரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டு கார் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிறுவனம் தயாரித்த கார்களில் 'பிரேக்' பிரச்சினை இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து அமெரிக்காவில் ஹோண்டா நிறுவனம் தயாரித்த 2,59,033 கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதே ரக கார்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள டீலர்ஷிப்பிடம் சென்றால், அங்குள்ள டெக்னிசீயன்கள் காரை பரிசோதித்து தேவைப்பட்ட மாற்று பாகங்களை பொருத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போன்று லட்சக்கணக்கான ஹோண்டா நிறுவனம் திரும்ப பெற்று இருந்தது. வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற சிஆர்- வி உள்ளிட்ட கார்களும் இதில் அடங்கும். ஸ்டீயரிங்களில் லேசான பிரச்சினை இருப்பதாக கூறி இவற்றில் சில கார்கள் திரும்ப பெறப்பட்டு இருந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com