டீசல் ஏற்றுமதிக்கான ஆதாய வரி உயர்வு

டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான ஆதாய வரியை மத்திய அரசு உயர்த்தி நேற்று அறிவித்தது.
டீசல் ஏற்றுமதி
டீசல் ஏற்றுமதி
Published on: 

மேற்கு ஆசியா பதற்றத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 27-ந்தேதி முதல் டீசல் மற் றும் விமான எரிபொருளுக்கும், மே 16-ந்தேதி முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு வரி விதித்தது. பின்னர் இது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிய மைக்கப்பட்டது. அந்த வகையில் டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான ஆதாய வரியை மத்திய அரசு உயர்த்தி நேற்று அறிவித்தது.

அதன்படி விமான எரிபொருள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10.50-ல் இருந்து ரூ.11 ஆக உயர்த்தப் பட்டு இருக்கிறது. மேலும் டீசலுக்கான சிறப்பு கூடுதல் கலால் வரி, சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் ஆகியவை லிட்டர் ஒன்றுக்கு ரூ.8.5-ல் இருந்து ரூ.11.5 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேநேரம் பெட்ரோல் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டு இருந்த ரூ.2.5 ஆதாய வரி, ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய வரி விதிப்புகள் அடுத்த 15 நாட்களுக்கு அமலில் இருக்கும் என மத்திய நிதி அமைச்ச கம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

X