

மின்னணு பொருட்கள் ஏற்றுமதி குறித்தான தரவு களை மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்த மின்னணு ஏற்றுமதி கடந்த நிதியாண்டு (2025-26) ஏப் ரல்-செப்டம்பரில் ரூ.2.08 லட்சம் (22.20 பில்லியன் அமெரிக்க டாலர்) கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் (2026-27) ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.2.99 லட்சம் கோடியாக (31.97 பில்லியன் டாலர்) உயர்ந்திருக்கிறது. அதாவது 44 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
இதில் செல்போன் ஏற்றுமதியை எடுத்துக்கொண்டால் கடந்த நிதி யாண்டு ஏப்ரல்-செப்டம்பரில் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்த நிலை மாறி ரூ.1.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதன் வளர்ச்சி 35.8 சதவீதம் ஆகும். செல்போன் அல்லாத பிற மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில், ரூ.1.29 லட்சம் கோடியாக (56.5 சதவீதம்) எகிறியிருக்கிறது.