டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
Published on

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று இதுவரை இல்லாத குறைந்த அளவான ரூ. 94.15 -ஐ எட்டியது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.15 என்ற அளவில் இருந்தது. சிறிது நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 94.26 என்ற அளவில் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, பங்குச்சந்தையில் நிப்டி 50 புள்ளிகள் சரிந்து 22,950 புள்ளிகளாக வர்த்தகம் ஆகி வருகிறது. சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் குறைந்து 74,200 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிவருகிறது. பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com