இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.19 ஆக இருந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
Published on

ஈரான் - அமெரிக்கா போரால் உலக அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று வர்த்தக முடிவில் 92.19 ஆக இருந்த நிலையில் இன்று காலை 92.34 என வர்த்தகம் தொடங்கியது. இன்று பிற்பகல் நேரத்தில் (intra day) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 92.44 ஆக வீழ்ச்சியை சந்தித்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் உலகளவில் டாலர் மதிப்பு அதிகரித்து வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com