ஈரான் - இஸ்ரேல் மோதல் எதிரொலி: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் மோதல் எதிரொலி: கடும் வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை
Published on

மும்பை,

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரால், இந்திய பங்குச் சந்தைகள் 2-வது நாளாக இன்றும் கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,449.76 புள்ளிகள் சரிந்து 78,771.53க்கும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 477.55 புள்ளிகள் சரிந்து 24,389.35க்கும் வர்த்தகமாகிறது

மேலும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், அசோக் லேலேண்ட், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் ஏ.பி.எல். அப்பல்லோ டியூப்ஸ் பங்குகள் அதிக இழப்பை சந்தித்து வருகின்றன.

வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரானின் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் வர்த்தகம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதன் தாக்கம் பங்குச் சந்தைகளிலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com