இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்-முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

பங்குச்சந்தை நிஃப்டி 394 புள்ளிகள் உயர்ந்து 23,017 புள்ளிகளில் வணிகமாகிறது.

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம்
Published on: 

மும்பை,

பண்டிகை கால நேரத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,965.80 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில், இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,415 புள்ளிகள் அதிகரித்து 74,197 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 394 புள்ளிகள் உயர்ந்து 23,017 புள்ளிகளில் வணிகமாகிறது

கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் உலக போர் பதற்றம் சற்று தணிந்துள்ளதாலும் இன்று பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாவதாக கூறப்படுகிறது.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.92 ஆக உயர்ந்துள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 104.67 டாலராக குறைந்துள்ளது.

நீண்ட காலமாக பங்குச்சந்தையில் ஏற்றமே இல்லை என புலம்பி வந்த முதலீட்டாளர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைந்துவிட்டது. இந்திய பங்குச்சந்தைகள் இன்று வேகமாக ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்தன.

X

Daily Thanthi
www.dailythanthi.com