இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான ஐபோன்கள்

மற்ற நாடுகளில் ஐபோன் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
AI Image for representation
AI Image for representation
Published on

இந்தியாவில் பாக்ஸ்கான், டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன் உற்பத்திக்கான ஆலைகளை நிறுவி இயக்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் ஐபோன்கள் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்ற நாடுகளில் ஐபோன் உற்பத்தியை படிப்படியாக குறைத்து இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியிருந்தார்.

இதன்மூலம் அமெரிக்கர்கள் கைகளில் தவழ உள்ள ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தியானதாக இருக்கும் என தெரிவித்தார். இந்தநிலையில் இந்தியாவில் பாக்ஸ்கான் ஆலைகளில் கடந்த மார்ச்-மே காலத்தில் உற்பத்தியான ஐபோன்களில் 97 சதவீதத்திற்குள்ளானவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின. இதன் மொத்த மதிப்பு ரூ.27 ஆயிரம் கோடி (3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). மேலும் டாடா நிறுவனம் தயாரித்த 86 சதவீத ஐபோன்களும் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com