இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு பரிசீலனையா?

பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேலும் 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்படுவதாக சொல்லப்படுகிறது.

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க  மத்திய அரசு பரிசீலனையா?
Published on: 

புதுடெல்லி

இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகளில் வைத்துள்ள தனது பங்குகளை 75 சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 2 வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 4 வங்கிகளில் உள்ள பங்குகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

பங்குகளை விற்பனை செய்ய திட்டம்

இந்த 4 வங்கிகளிலும் பொது பங்குதாரர் அளவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஓராண்டுக்குள் மேற்கொள்ளப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, சம்பந்தப்பட்ட வங்கிகள் பங்குச்சந்தை மூலம் நிதி திரட்டலாம். அல்லது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, மத்திய அரசு தனது பங்குகளை நேரடியாக விற்பனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது.பங்குகளை விற்பனை செய்யும் முறை மற்றும் அதற்கான கால அட்டவணை ஆகியவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

2 வங்கிகள் தனியார்மயமாகுமா?

பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேலும் 2 பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், எந்த வங்கியைத் தனியார்மயமாக்குவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com