ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டிற்கான பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
Published on

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் மும்பையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என கூறினார்.

இதன் காரணமாக வீட்டு கடன் மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்களிலும் உடனடி மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகளாவிய பொருளாதார நிலவரம் மற்றும் விநியோகச் சங்கிலியில் நிலவும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டிற்கான நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு 6.9 சதவீதத்தில் இருந்து 6.6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com