

டெல்லி,
இந்தியாவில் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தில், யூப்ளெக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஸ்பெக்ட்ரா சிஸ்டம்ஸ் கூட்டாக ஏலம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சோதனை அடிப்படையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பில் தலா 100 கோடி பாலிமர் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி ஏற்கனவே நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்திருந்தார்.
இந்த திட்டத்துக்காக ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் நிறுவனம், பிளாஸ்டிக் நோட்டுகளுக்கான மூலப்பொருள் சப்ளையர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிட்டு உள்ளது. டெண்டர் நிபந்தனையின்படி, 10 ரூபாய் நோட்டுகளுக்கு 34 ஆயிரம் ரீம்களும், 20 ரூபாய் நோட்டுகளுக்கு 34 ஆயிரம் ரீம்களும் என மொத்தம் 68 ஆயிரம் ரீம் பிளாஸ்டிக் தாள் தேவைப்படுகிறது.
இந்த டெண்டரில், இந்தியாவின் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனமான யூப் ளெக்ஸ், அமெரிக்காவின் ரூபாய் நோட்டு பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பெக்ட்ரா சிஸ்டம்ஸ்சுடன் இணைந்து விண்ணப்பித்துள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகளுக்காக பி.ஓ.பி.பி., எனப்படும் சிறப்பு வகை பாலிப் ரொப்பிலீன் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்பட உள்ளது.
பெரிய அளவில் கொள்முதல் செய்வதற்கு முன், அதன் தொழில்நுட்ப தரம், பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் திறன் மற்றும் தொடர்ந்து வழங்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படும்.
இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாலிமர் நோட்டுகள், பி.ஒ.பி.பி., வகை பாலிப்ரொப்பிலீன் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் தாளில்
உலகின் ஏறத்தாழ 60 நாடுகளில் பாலிமர் நோட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தப்படுகின்றன.
பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம், ருமேனியா உள்ளிட்ட நாடு களில் இவ்வகை நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் பெரிய அளவில் அறி முகப்படுத்துவதற்கு முன், பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் தரம் மற்றும் நீண்டகால பயன்பாட்டு திறன் உள்ளிட்ட அம்சங்கள் சோதிக்கப்பட்ட உள்ளன.