ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்

மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
Published on

அமராவதி,

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) சேவைகளை எதிர்கொள்ள புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்க பல்வேறு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றன.

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக இருக்கிறது. இதை பயன்படுத்திக்கொள்ள சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அந்தவகையில் கூகுள் நிறுவனம் ஆந்திராவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.25 லட்சம் கோடி) மதிப்பில் ஏ.ஐ. தரவு மையத்தை நிறுவுகிறது.

இதைப்போல மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆந்திராவில் 1 ஜிகாவாட் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கிறது. இந்த தகவலை ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். எனினும் இதற்கான நிதி விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com