நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவு

ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் குறைந்துள்ளது
நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவு
Published on

டெல்லி,

ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.16 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக குறைவான பணவீக்கம் ஆகும். இதற்குமுன் கடந்த 2019 ஜூலை மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.15 சதவீதமாக பதிவானது.

கடந்த மார்ச் மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 3.34 சதவீதமாக இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் 4.83 சதவீதமாக ஆக இருந்தது.

அதேபோல், உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.78 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாத பணவீக்கமான 2.69 சதவீதத்தை விட குறைவாகும். அதேபோல், 2024 ஏப்ரல் மாதம் உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் 8.7 சதவீதமாக இருந்தது. நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் வரப்பிற்குள் இருப்பதால் ரேப்போ வட்டி விகிதத்தை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com