டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவு
Published on

புதுடெல்லி,

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6-ந்தேதி 90.65 என்ற நிலையில் இருந்தது. நேற்று காலையில் 90.66 என்ற நிலையில் தொடங்கிய ரூபாய் மதிப்பு பின்னர் 90.37 என்ற நிலையில் லேசான முன்னேற்றம் கண்டது. ஆனால் மாலையில் இது மீண்டும் சரிந்து 90.74 என்ற நிலையில் முடிந்தது. இதன் மூலம் முந்தைய நாளைவிட 9 காசுகள் சரிந்தது.

முதலீட்டாளர்களிடையே இருந்த ரிஸ்க் உணர்வுகள் மற்றும், உள்நாட்டு பங்குச் சந்தைகள் மற்றும் வெளிநாட்டு நிதிவரத்துகளில் இருந்து கிடைத்த ஆதரவு குறைந்ததால், ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்தைக் கண்டதாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். முக்கியமாக இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பை வர்த்தகர்கள் அணுகி வருவதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com