

கொல்கத்தாவை சேர்ந்த பி.எம்.டபிள்யூ. இண்டஸ்ட்ரீஸ் லிட். நிறுவனம் இந்திய தொழில் துறையில் முன்னணி ஸ்டீல் நிறுவனமாக விளங்கி வருகிறது.இந்த நிறுவனம் ஜார்கண்டின் பொகாரோவில் உள்ள செயில் நிறுவனத்துடன் ஒரு கூட்டு இணைப்பையும், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்டில் உற்பத்தி ஆலைகளையும் கொண்டுள்ளது.இந்த நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வரவு- செலவு விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.21.62 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தை விட 42.7 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.15.15 கோடியாக இருந்துள்ளது.இதைப்போல செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாயும் 33 சதவீதம் அதிக ரித்து ரூ.195.42 கோடியாக இருந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.146.96 கோடியாக இருந்தது.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதி காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 34.3 சதவீதம் உயர்ந்து. ரூ.40.74 கோடியாக இருந்துள்ளது. மொத்த வரு வாயும் 23.8 சதவீதம் அதிகரித்து, ரூ.372.10 கோடியாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் பாரம்பரிய வணிகம், அதன் அனைத்து முக்கியப் பிரிவுக ளிலும் செயல்பாட்டு மீள்திறனைத் தொடர்ந்து வெளிப்படுத்தியதாக அதன் தலைவர் ராம் கோபால் பன்சால் தெரிவித்துள்ளார்.இதற்கு, ஜார்கண்டின் பொகாரோவில் புதிதாக அமைக்கப்படும் கீழ்நிலை ஸ்டீல் வளாகத் தின் முதல் கட்டம் செயல்பாட்டுக்கு வந்தது ஒரு முக்கிய மைல்கல் எனக்கூறிய அவர், வண் ணப்பூச்சுப் பிரிவு அக்டோபர் 5-ந்தேதி செயல்படுவதற்கான அனுமதியைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி, புதிய திட்ட விரிவாக்கத்துக்காக ரூ.516.4 கோடி செலவிடப் பட்டுள்ளது எனவும், இதில், நிறுவனத்தின் உள் வருவாயிலிருந்து ரூ.208.9 கோடியும், கடனா கப் பெறப்பட்ட ரூ.307.5 கோடியும் அடங்கும் என்றும் பன்சால் கூறினார்.