ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் இறுதிநாளான இன்று (17.04.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதன்படி, 155 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 351 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 496 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 583 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

178 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 522 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 504 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 493 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

148 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 831 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 515 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 718 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அதேவேளை, ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் திறந்துள்ளதால் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச அளவில் பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. இதனால், வரும் திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com