

மும்பை,
அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வந்தது. இந்த மோதல் இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, ஈரானுடன் ஒப்பந்தம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பால் சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த வகையில், வாரத்தின் இறுதிநாளான இன்று (12.06.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 461 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 23 ஆயிரத்து 622 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 638 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 814 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
791 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 943 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 695 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 527 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
379 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 245 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 829 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 987 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.