

மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று (16.03.2026 - திங்கட்கிழமை) அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, 257 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 408 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 655 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 413 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 376 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 515 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
938 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 75 ஆயிரத்து 502 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
3 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 615 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 653 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 116 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.