அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிரடியாக  உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

அமெரிக்கா, ஈரான் இடையேயான மோதலால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வந்தது. இந்த மோதல் இந்திய பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இதனிடையே, ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை இன்று (17.06.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

பங்குச்சந்தை உயர்வு

அதன்படி, 96 புள்ளிகள் ஏற்றம் பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 85 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 287 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 585 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது

37 புள்ளிகள் சரிந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 404 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 347 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

71 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 575 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 360 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 905 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com