பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஸ்விக்கியில் பிளாட்பார்ம் கட்டணம் 600 சதவீதம் உயர்ந்துள்ளது.
பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
Published on

மும்பை,

பிரபல உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி பயன்பாட்டுக் (பிளாட்பார்ம்) கட்டணத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. அதாவது, உணவு டெலிவரி ஆர்டர்களுக்கான பயன்பாட்டுக் கட்டணம் ரூ.2 அதிகரித்துள்ளது. இதன்படி,தற்போதுள்ள ரூ.12 ல் இருந்து ரூ.14 ஆக  கட்டணம் உயர்ந்துள்ளது. பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்ததே இந்த கட்டண உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், ஸ்விக்கியில் பயன்பாட்டு கட்டணம் 600 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2023 இல் ரூ.2 ஆக இருந்தது, ஜூலை 2024 இல் ரூ.6 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2024 இல் ரூ.10 ஆக உயர்ந்தது, இப்போது ரூ.14 ஆக உள்ளது. இந்தக் கட்டணங்களிலிருந்து தினசரி வருவாயில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்விக்கி நிறுவனத்தின் கட்டண உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com