தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம்?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்து விற்பனை ஆனது.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை... இன்றைய நிலவரம்?
Published on

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சனிக்கிழமை தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து திங்கட்கிழமையும் தங்கம் விலை ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.71.640-க்கும், ஒரு கிராம் ரூ. 8955-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை ரூ. 1 உயர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.118-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 71,560-க்கும், ஒரு கிராம் ரூ. 8,945-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ரூ. 1 உயர்ந்து வெள்ளி ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com