

மும்பை,
வாரத்தின் முதல் நாளான இன்று (16.02.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 211 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 682 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 762 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 60 ஆயிரத்து 949 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது
அதேபோல், 179 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 28 ஆயிரத்து 306 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 650 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 277 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
13 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 641 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 807 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 68 ஆயிரத்து 283 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.