

மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று (02.04.2026 - வியாழக்கிழமை) அதிரடியாக உயர்ந்தது. காலை வர்த்த தொடக்கத்தில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை அதிரடியாக மீண்டு வர்த்தக இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
அதன்படி, 33 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 22 ஆயிரத்து 713 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 100 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 548 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 59 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 24 ஆயிரத்து 41 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
185 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 319 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 65 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 394 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 126 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 9 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.