ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்றத்துடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தொடர் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை தற்போது உயரத்தொடங்கியுள்ளது. இந்திய பங்குச்சந்தை இன்று (21.04.2026 - செவ்வாய்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 175 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 541 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 780 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 365 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

316 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 26 ஆயிரத்து 856 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 707 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 226 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

137 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 944 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 964 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 64 ஆயிரத்து 697 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com