கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
கடும் சரிவை சந்தித்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (01.06.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது.

பங்குச்சந்தை

அதன்படி, 165 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 382 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 596 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 643 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

345 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 8 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 508 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 267 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

210 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 264 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 707 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 424 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பங்குச்சந்தையில் இருந்து நேரடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்கா - ஈரான் மோதல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com