

மும்பை,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று (06.03.2026 - வெள்ளிக்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 182 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 583 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 786 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 263 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
407 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 826 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 682 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 79 ஆயிரத்து 331 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேவேளை, 7 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 267 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 868 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 540 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.