அதிரடி உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர்.
அதிரடி உயர்வுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக சர்வதேச பங்குச்சந்தைகளில் கடும் சரிவு நிலவி வந்தது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக கடும் சரிவுடன் வர்த்தகமானது.

இந்நிலையில், போர் விரைவில் முடிவுக்குவரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தை இன்று (10.03.2026 - செவ்வாய்கிழமை) அதிரடியான உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 125 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 24 ஆயிரத்து 152 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 544 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 560 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

232 புள்ளிகள் உயர்ந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 283 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 357 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 950 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

174 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 110 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 600 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 522 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை உயர்வை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் லாபம் அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com