

மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (11.06.2026 - வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதன்படி, 53 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 161 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 76 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 176 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
54 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 152 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 150 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 73 ஆயிரத்து 832 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
124 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 866 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 99 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 158 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பங்குச்சந்தையில் இருந்து நேரடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்கா - ஈரான் மோதல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இன்று இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.