

மும்பை,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போரால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இன்று (11.03.2026 - புதன்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 302 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 960 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 980 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
505 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 42 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 77 ஆயிரத்து 171 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
176 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 32 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 1 ஆயிரத்து 72 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 952 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.