

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (12.05.2026 - செவ்வாய்கிழமை) கடும் சரிவை சந்தித்தது. அதன்படி, 436 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 379 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 884 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 555 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
518 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 137 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 456 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 559 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
361 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 972 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 42 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 332 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பங்குச்சந்தையில் இருந்து நேரடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், அமெரிக்கா - ஈரான் மோதல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.