

மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (13.05.2026 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 153 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 534 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 330 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 884 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
144 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 25 ஆயிரத்து 278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 426 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 74 ஆயிரத்து 957 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
184 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 155 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 280 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 613 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.