

மும்பை,
வாரத்தின் இறுதிநாளான இன்று (19.06.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. இதனால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
அதன்படி, 154 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 13 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 278 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 685 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
150 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 431 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 607 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 802 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
23 புள்ளிகள் உயர்ந்து மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 618 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 282 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 65 ஆயிரத்து 72 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.