

மும்பை,
இஸ்ரேல் - ஈரான் போர் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்குமேல் இந்திய பங்குச்சந்தை ஏற்ற ,இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று (24.04.2026 - வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்தது.
அதன்படி, 275 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 897 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 215 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 89 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
105 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 141 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 999 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 664 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
116 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 731 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 280 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 188 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.