அதிரடியாக உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிரடியாக  உயர்ந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
Published on

மும்பை,

வாரத்தின் முதல் நாளான இன்று (25.05.2026 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 246 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 964 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 902 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 54 ஆயிரத்து 959 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

464 புள்ளிகள் அதிகரித்த பின் நிப்டி 25 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 862 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 272 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

132 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 14 ஆயிரத்து 512 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 991 புள்ளிகள் அதிகரித்த பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 902 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை அதிரடியாக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com