

மும்பை,
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற , இறக்க்கத்துடன் காணப்படுகிறது
இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று (28.04.2026 - செவ்வாய்கிழமை) சரிவை சந்தித்தது.
அதன்படி, 97 புள்ளிகள் சரிந்த நிப்டி 23 ஆயிரத்து 995 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 863 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
227 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 25 ஆயிரத்து 937 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 416 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 76 ஆயிரத்து 886 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 44 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 976 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1 ஆயிரத்து 23 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 360 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.