சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை


சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை
x
தினத்தந்தி 3 Sept 2024 10:50 AM IST (Updated: 3 Sept 2024 11:18 AM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், உயரத்தொடங்கிய இந்திய பங்குச்சந்தை தினம்தினம் புதிய உச்சம் தொட்டது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை நேற்றும் புதிய உச்சம் தொட்டது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மிட்கேப் நிப்டி தவிர எஞ்சிய குறியீடுகள் சரிவிலேயே வர்த்தகமாகி வருகின்றன.

அதன்படி, 25 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 250 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 50 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 370 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

80 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 470 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பின் நிப்டி 30 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 700 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 100 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 400 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், மிட்கேப் நிப்டி 60 புள்ளிகள் ஏற்றம்பெற்று 13 ஆயிரத்து 200 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த மாதம் முழுவதும் ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை இம்மாதம் சற்று இறக்கத்தை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story