புதிய உச்சத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை


புதிய உச்சத்தில் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
x
தினத்தந்தி 20 Sept 2024 11:29 AM IST (Updated: 20 Sept 2024 4:44 PM IST)
t-max-icont-min-icon

இந்திய பங்குச்சந்தை புதிய உச்சத்தில் முடிவடைந்தது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை இம்மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், இந்திய பங்குச்சந்தை உயரத்தொடங்கியது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சத்துடன் முடிவடைந்தது.

அதன்படி, நிப்டி 350.15 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 790.95 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேபோல், 755.60 புள்ளிகள் உயர்ந்து பேங்க் நிப்டி 53 ஆயிரத்து 793.20 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு முடிவடைந்தது.

சென்செக்ஸ் 1,359.50 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 544.31 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டு நிறைவடைந்தது. அதேபோல், 385.55 புள்ளிகள் உயர்ந்து பின் நிப்டி 24 ஆயிரத்து 789.20 என்ற புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. அதேவேளை, 865.54 புள்ளிகள் வரை உயர்ந்து பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 955.12 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மஹிந்திரா மஹிந்திரா 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ, பார்தி ஏர்டெல், நெஸ்லே, அதானி போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎப்சி வங்கி, டெக் மஹிந்திரா, மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. பாரத ஸ்டேட் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை பின்னடைவைச் சந்தித்தன.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை லாபத்துடன் நிலைபெற்றது. ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் குறைந்த விலையில் இருந்தன. அமெரிக்க சந்தைகள் வியாழன் அன்று குறிப்பிடத்தக்க உயர்வுடன் முடிவடைந்தன.


Next Story